காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மனாளிநத்தம் தாஸ் என்பவரின் மகன் இளங்கோவன் . 12ஆம் வகுப்பு படிக்கும் இளங்கோவன் கடந்த மே மாதம் 12ஆம் தேதி அன்று நேபாளில் உள்ள காத்மாண்டூ தசரத் ரங்கலா என்னுமிடத்தில் நேபால் மூத்தாய் அசோசியேஷன் நடத்திய 4வது இண்டர்நேசனல் அளவிலான போட்டிகளில் இளங்கோவன் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவர் பஞ்சாப் அஸ்ஸாம் மற்றும் வெளிநாடுகள் உள்பட 30 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் வருகிற டிசம்பர் மாதம் கம்போடியாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார் இது போன்ற ஏழை மாணவர்கள் சாதனை புரிய தமிழக அரசு உதவி செய்து மாணவனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உதவி செய்தால் வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வென்று தருவேன் என்று மாணவன் இளங்கோவன் உறுதியோடு கூறினார்.