மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் மக்களவையில் முதல் முறையாக விவாதத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் முழுக்கம் எழுப்பியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜனதாவினர் உண்மையாக இந்துக்கள் அல்ல என்று ராகுல் கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.