நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாதது என்றும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.