Mnadu News

இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்

திரையுலகில் பிரமாண்டத்தை கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவர் இயக்குனர் ஷங்கர். இவரது தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். இடையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறுஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. மேலும் இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு சென்றார் இயக்குனர் ஷங்கர்.

வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து இயக்குனர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார்.

இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

Share this post with your friends