நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவரின் உடல் நலம் பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பல்வேறு இடங்களிலுள்ள கோயில்களில் வழிபாடு செய்துவந்தனர்.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி சிறிது காலம் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று தகவல் தெரியவந்துள்ளது.