எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா “என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25 வருடங்கள் ஓடிவிட்டது. முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது ‘மான்ஸ்டர்’.
என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது. இதற்கு மேல் தொடர்ந்து நடிகனாக உழைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நினைக்கிறேன்” என கூறினார்.