ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் அந்தஸ்தை பெற்றிருக்கிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திமுக கட்சித் தலைவர் அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து 10 வருடங்களுக்குப் பிறகு முதல்வர் அரியணையில் ஜெகன்மோகன் ரெட்டி அமர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.