நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ரித்திகா சென் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார். நகைச்சுவையை பிரதானமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் ஜாக்கிசான் பாணியிலான தற்காப்பு மற்றும் தப்பித்தல் வகையிலான நகைச்சுவை சண்டைக்காட்சிகளாக படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சண்டை பயிற்சியாளராக ஸ்டண்ட் சில்வா பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .