ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் கோடாங்கிபட்டி என்ற கிராமத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது . இதனால் அந்த கிரமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வெளி ஊருக்கு வேளைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதுகுறித்து அந்த ஊர் மக்கள் உரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அந்த சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அதே சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .