வத்திராயிருப்புவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கான்சாபுரம், ராமசாமியாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூர், ரெங்கபாளையம், கோட்டையூர், இளந்தைக்குளம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் காலை மற்றும் மாலை அரசு பேருந்தில் சென்று வருகிறார்கள்
போதிய பஸ் வசதி இல்லாததால் பஸ்சின் படிக்கட்டுகளில் மாணவ மாணவிகள் தொங்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது மேலும் வேகத்தடைகளில் செல்லும்போது சில சமயங்களில் மாணவர்கள்
பஸ்சில் இருந்து விழுந்துவிடுகிறார்கள் .
அந்த பகுதி மக்கள் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு காலை, மாலை பள்ளி நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.