தமிழகத்தில் தற்போது அனல் காற்று வீசுவதால் கோடை வெயிலை தாக்கு பிடிக்க முடியவில்லை. மேலும் , கேரளாவில் தென் மேற்கு மழை தொடங்கியுள்ள காரணத்தால் தமிழகத்தில் இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களுக்கு அனல் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ,கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தக்கலை, அழகிய மண்டபம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கையால் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.