ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அரசு அறிவித்த 60 நாள் தடைக்காலம் வருகிற 15-ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதையடுத்து மீனவர்கள் அவர்களின் படகுகளில் பணிகளை உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். இதுகுறித்து பாம்பன் மீனவர் டயாஸ் கூறுகையில், பாம்பன் பகுதியில் இருந்து 100 படகிற்கு மேல் கடலுக்கு செல்லும் நிலையில் நாங்கள் பல லட்சம் கடன் வாங்கி எங்களுடைய படகுகளை வேலை பார்த்து வருகிறோம்.
60 நாள் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்று நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அதனால் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் பிடித்துவரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு அறிவித்த தடைக்காலம் பணமான 5000 ரூபாய் எங்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு எங்களுக்கு தடை காலம் முடிவதற்கு முன்பே கொடுக்க வேண்டும் என்று கூறினார்.