குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று மாலை 5 மணியளவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெருவோரம் நின்ற காளை, அவர் அருகில் வந்ததும் சட்டென்று பாய்ந்து அவரை கீழே தள்ளியது. எழுந்து நின்று அந்த காளையை பார்த்த முதியவரை மீண்டும் துரத்திச் சென்று அவரை கொம்பால் முட்டி தூக்கியது.
இதனை கண்ட அருகிலிருந்த ஒரு இளைஞர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். மீண்டும் சற்று நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த மற்றொரு இளைஞனின் வாகனத்தையும் அந்த காளை இதே போல் முட்டித் தள்ளியது.
இதேபோல் அந்த பகுதியில் சென்றவர்களை முட்டி அச்சுறுத்திய காளை மீட்கப்பட்டு, தற்போது கோசாலையில் விடப்பட்டுள்ளது .