கடலூர் கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செல்லாங்குப்பம் ராமுவின் மகள் ஜனனிக்கு திருமணம் முடிவாகி இருந்தது . மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக கடலூர் உப்பலவாடியை சேர்ந்த அழகு கலை நிபூனர் சுகுணா மணமகளுக்கு அலங்கரிக்க நியமிக்கபட்டு அவரும் மணமகளை அலங்கரித்து மணமேடைக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் ,மணமகளை அலங்கரித்ததில் மணமகளின் நகைகள் ஒரு நெக்லஸ் நான்கு மோதிரங்கள் குறைந்து இருப்பதை அறிந்து மண்டபம் முழுவதும் தேடி கிடைக்காத நிலையில் மணமகளின் தந்தை ராமு புதுநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் அழகுகலை நிபுனர் சுகுணாவிடம் மேற்க்கொண்ட விசாரனையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சுகுணாவிடம் இருந்து ஒரு நெக்லஸ் மற்றும் நான்கு மோதிரம் மோதிரங்களை விற்பதற்க்காக உருக்கிய தங்க கட்டி என மொத்தம் ஆறு பவுனுக்கு மேலான நகையை மீட்டு சுகுனாவை கைது செய்தனர்.