ஒரே நாளில் 5 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து தியேட்டர் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது .இந்த திரையரங்கு நிர்வாகமானது கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் 30 சதவிகிதம் கேளிக்கை வரியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு திரையரங்க நிர்வாகம் செலுத்த வேண்டும். ஆனால்,திரையரங்க நிர்வாகமானது சேலம் மாநகராட்சிக்கு நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டிய கேளிக்கை வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் கேளிக்கை வரி 30 லட்சம் ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த இந்த தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து ஐந்து திரையரங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .சேலம் மட்டுமின்றி சேலம் வந்து செல்லும் வெளியூர் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்காக விளங்கிய இந்த திரையரங்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.