5 வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
யோகா நமது கலாசாரத்தின் முக்கிய அம்சம் என்று கூறிய மோடி, யோகாவை இன்று உலகமே கொண்டாடுவதாக பெருமிதத்துடன் கூறினார் . மேலும் விளிம்புநிலையில் உள்ள கடைசி மனிதன் வரைக்கும் யோகாவை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
யோகா செய்வதன் மூலம் உடலுக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிவித்த மோடி, யோகாவால் ஏழைகள் கூட பயன் அடைய முடியும் என்று கூறினார்.யோகாவை கற்று அதை தினமும் செய்வதன் மூலம் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார். .