Mnadu News

வாயு புயல் திசை மாற்றத்தால் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை -பாலச்சந்திரன்

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் நேற்று மற்றும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது .தற்பொழுது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் ,மேலும் இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.மேலும் சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மேலும் வாயு புயல் திசை மாற்றத்தால் தென்மேற்கு பருவ மழையாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

Share this post with your friends