விஜய் அவர்களது பிறந்தநாள் இன்று ரசிகர் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .இந்நிலையில்
படத்தின் முதல் பார்வை நேற்று மாலை வெளியானது . வெளியான அந்த நேரத்திலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேவேற்பை பெற்றது.அதோடு மட்டுமல்லாமல் விஜய் பிறந்தநாளையொட்டி இரவு 12 மணியளவில் இரண்டாவது பார்வை வெளியானது .இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் விஜய் அவர்களுடைய பிறந்தநாள் கோலாகலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டார் .அவர் அதில் பதிவிட்டது என்னவென்றால் ,என் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டார் .
என் அன்புத் தம்பி @actorvijay க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2019