Mnadu News

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சிலப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களான ஈரோடு ,தேனி,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை நகரில் மழை இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மழை தற்பொழுது பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது .மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதோடு மட்டுமல்லாமல் தென்மேற்கு பருவக்காற்றால் பதினான்கு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதோடு மட்டுமல்லாமல் வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Share this post with your friends