Mnadu News

தண்ணீர் பிரச்சனைக்கு வருத்தம் தெரிவித்த டைட்டானிக் ஹீரோ

இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை மக்களை வாட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் சென்னையில் மக்கள் தண்ணீரின்றி பெரிதும் அவதி பட்டு வருகின்றனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையின் தண்ணீர் பிரச்சனை பற்றி அறிந்த டைட்டானிக் படத்தின் ஹீரோவான லியொனார்டோ டீகாப்ரியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் சென்னை மக்கள் தண்ணீருக்காக படும் கஷ்டத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் .

அந்த பதிவில் சென்னையின் சுற்று பகுதிகளில் இருக்கும் ஏரிகள் கிணறுகள் அனைத்தும் வறண்டுபோய்விட்டன. சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மழையால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டிருந்தார் .

Share this post with your friends