Mnadu News

சசிகலா, தினகரன் இருவர் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் – அமைச்சர் ஜெயக்குமார்

தங்கத்தமிழ்செல்வன் பேசிய சர்ச்சை ஆடியோவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது .இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் ,அதிமுக கட்சியினரிடம் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு அதை பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார் .

தங்கத்தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் கேட்கையில் அது குறித்து அதிமுக தலைமை தான் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறுகையில் ,சசிகலா மற்றும் தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Share this post with your friends