அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குரிய பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் அமலாபால் அவர்கள் , விஜய் சேதுபதியின் 33ஆவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சந்தரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை அமலா பால் வெளியிட்டார் , புதிய படத்திற்கான ஆடைகளை வாங்குவதாக மும்பை வந்திருப்பதாகவும், படத் தயாரிப்பாளர் ரத்னவேலு குமார் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் தாம் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் ,ஆடை டீசர் வெளியான பின்னரே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், இது தயாரிப்பு நிறுவனத்தின் ஆணாதிக்கத்தையே காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்தை சாடியுள்ள அவர், அதேவேளையில் விஜய் சேதுபதி மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
#VSP33 #TheTruth pic.twitter.com/jETkOIpyba
— Amala Paul ⭐️ (@Amala_ams) June 27, 2019