Mnadu News

அரசு  கொள்முதல் மையத்தில்  நெல்  மூட்டைகள்  தேக்கம்

Image result for நெல்  மூட்டைகள் 

சோழவந்தான் பகுதியின்  அருகில்  உள்ள  திருவாலவாயநல்லுாரில் அரசு சார்பில்  இயங்கி வரும்  நெல் கொள்முதல் மையத்தில் லாரிகள் முறையாக  வராததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன . இந்த மையத்தில்  மட்டும்  நேரடியாக அரசே முன்வந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதால் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயனடைகின்றனர்.

நெல் ஒரு கிலோ  மதிப்பை தனியார் 11.40 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அரசு 18.40 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில்  லாரிகள் முறையாக  வராததால் நெல் மூட்டைகள்  டன் கணக்கில் விற்காமல்  தேங்கியுள்ளன. இதனால் நெல் கொள்முதல் பணிகள் முடங்கியதால் விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின .

இதைப் போக்க  தற்காலிக தீர்வுக்காக  விவசாயி சகுபர் சாதிக் ஒரு மையம் துவக்கப்பட்டு 20 நாட்களில் இரண்டு லாரி லோடுகள் மட்டுமே நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும் உள்ள  3 ஆயிரம் மூட்டைகள்   15 நாட்களாக குடோவுனுக்கு எடுத்து செல்லப்படாமல் உள்ளது. இந்த மூட்டைகள் வெயில், மழை பெய்தால் பாதிக்கப்படும் அவலம் நிலவுகிறது.

ஐம்பது ஏக்கரில் நெல் அறுவடையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் லாரிகளை நெல் மூட்டைகளை கொண்டு செல்ல முன்வர வேண்டும் என்று  அவர்கள்  அரசிடம்  கோரிக்கை தெரிவித்துள்ளனர் .

 

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More