அமெரிக்காவின் மன்ஹட்டானில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரையான வாடகை ஹெலிகாப்டர் சேவை உபெர் நிறுவனம் தொடங்கியுள்ளது.ஒரு முறை பயணத்துக்கு 200 முதல் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹெலிகாப்டர் சேவையை அனைத்து உபெர் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியாது.
உபெர் கார் சேவை அல்லது உபெர் ஈட்ஸ் ஆப்-ல் 2 ஆயிரத்து 500 டாலர்கள் செலவளித்தவர்களைப் போன்ற பிளாட்டினம் மற்றும் டைமண்ட் புள்ளிகளைப் பெற்ற வாடிக்கையாளர்கள்தான் இந்த சேவையைப் பெற முடியும்.
அமெரிக்காவின் பிற இடங்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த உபெர் திட்டமிட்டுள்ளது.