சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருதினை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திறன் மேம்பாடு என்ற முறையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது என்றார்.
மலேசியவில் உள்ள தனியார் நிறுவத்தின் உதவியுடன் அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் பாடபுத்தகங்கள் இல்லாமல் க்யூ ஆர் கோட் மற்றும் பிடிஎப் வடிவில் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக குறிப்பிட்டார்.