இந்திய ராணுவத்தின் மீது இடைவிடாத தாக்குதல் நடத்த வேண்டும் என அல் கொய்தா அமைப்பின் தலைவனான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளான்.அவன் விடுத்துள்ள வீடியோ பதிவில், இந்திய ராணுவத்திற்கும், காஷ்மீர் அரசுக்கும் எதிராக போராட வேண்டும் என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்து மனித இழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளான்.
குறிப்பிட்ட சமூகத்தினர் இழந்த நிலங்களை மீட்பதற்காகவே காஷ்மீர், பிலிப்பைன்ஸ், செசன்யா, மத்திய ஆசியா நாடுகளில் போராட்டங்கள் நடப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளான்