மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.
காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக தற்பொழுது உள்ளதால் போட்டியின்றி தேர்வாகித்தியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது .தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளனர்.
அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்டுட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார் .தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கும் சான்றிதழை வழங்கி வருகிறார் சட்டப்பேரவை செயலர் சீனிவாசன்.