கடந்த சில ஆண்டுகளாக அண்டார்டிகாவில் பனிபாறைகள் உருகி கடலில் கலந்து வருவதால் அண்டார்டிகாவில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நாசாவிடம் நிதியுதவி பெரும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், மிகப்பெரிய பனிப்பாலமான, தவைட்ஸ் பனிப்பாறை எப்படி உருகுகிறது என பல கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் முடிவில் தவைட்ஸ் பனிப்பாறை ஆபத்து விளைவிக்கும் வகையில் நிலையற்ற தன்மையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், கடல் மட்டம் பெருமளவு உயர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.