சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்பிடி குடியிருப்பு அரசு பள்ளி அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த லிப்பு தாஸ் என்பவர் பள்ளியை விட்டு வெளியே வரும் சிறுவர்கள் மற்றும் மழலைகளை அழைத்து கட்டாயமாக சாக்லேட்டுகளை கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்தினார். இதனை சாப்பிட மறுக்கும் சிறுவர்கள் மற்றும் மழலைகளை மிரட்டி சாப்பிடவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தியதை தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் மழலைகள் கூச்சலிட்டனர்.
அருகில் உள்ள பெற்றோர்கள் லிப்பு தாஸ்சை சூழ்ந்து தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சென்னை புதுவண்ணாரப்பேட்டையை வெங்கடேசன் அலி தெருவை சேர்ந்தவர். குப்புலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இவர் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு பள்ளிவாசலில் நின்று வெளிய வரும் சிறுவர்களுக்கு மயக்க மருந்து தடவிய சாக்லெட்டை கொடுத்து வட மாநிலத்துக்கு கடத்த முயற்சி செய்தார் என தெரியவந்துள்ளது.அதனைத் தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.