விஷ்ணு விஷால் அவர்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் சமூகத்திற்கு அக்கறை உள்ள கருத்துக்களை தெரிவிக்கும் படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் வந்த படங்களில் ஒன்றாக ராட்சசன் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.இந்நிலையில் ,விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படத்தின் தகவல் வெளியாகியுள்ளது .
எழில் இயக்கத்தில் ‘ஜகஜால கில்லாடி’, பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’ ஆகிய படங்கள் விஷ்ணு விஷாலின் நடிப்பில் தயாராகி வெளிவர இருக்கிறது. தவிர, சஞ்சீவ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் விக்ராந்த்துடன் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. லைகா தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘ஜீவி’ இயக்குநரின் படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளார். அதை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.