இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராமரிப்பு பணி காரணமாக ஜூலை14 ஆம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 2.10 மணி வரை வேளச்சேரி – கடற்கரை இடையே இருமார்க்கத்தில் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடற்கரை – தாம்பரம் இடையே ஜூலை 14ஆம் தேதி மின்சார ரயில்கள் வழக்கம் போல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படமாட்டாது எனவும், பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10.30 மணி முதல் மாலை 3.10 மணி வரை 15 முதல் 45 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More