திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வாணை. இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், தெய்வாணை அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாய்ந்ததில், இருவரும் கீழே விழுந்தனர். இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், இருவரையும் கடுமையாக தாக்கியதுடன் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், அவர்களது பெயர் பிரசாத், மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More