தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய பொதுசேவைகள் செய்து வருகிறார்.இதுவரை அவர் பல ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்தும் வந்துள்ளார் .
இந்நிலையில் ஒரு இசை வெளியீட்டு விழா ஒன்றில் நீக்கிட தேர்வு குறித்து பேசிய அவர் 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் கூறினார் .