தாம்பரம் அருகே ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அந்த பங்கிற்கு கஞ்சா போதையில் வந்த ரவுடிக்கும்பல் ஒன்று, ஊழியர் ஒருவரை கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.ரவுடிகள் இடையூறு செய்ததை பார்த்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது .
கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி சென்ற ரவுடிகள், போலீசில் தகவல் சொன்னது யார் எனக் கேட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டியதுடன், பெட்ரோல் நிரப்ப வந்த ஒருவரைத் தாக்கத் தொடங்கினர். கையில் பட்டாக் கத்திகளையும் எடுத்ததால் பதற்றம் நிலவியது.
கஞ்சா போதையில் இருந்த ரவுடிக் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.