“3” படத்தில் தனுஷ் அறிமுகம் செய்து வைத்தவர் தான் ராக்ஸ்டார் அனிருத். அன்று துவங்கிய பயணம் இன்று வேறு ஒரு உச்சத்தை எட்டி உள்ளது. டாப் 5 இசை அமைப்பாளர்கள் என்று தமிழ் சினிமாவில் எடுத்து கொண்டால் அதில் முதல் இடத்தில் தற்போது அனிருத் தான் கர்ஜனையாக அமர்ந்து உள்ளார்.
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சூரியா என அனைத்து முதல் தர நடிகர்களுக்கும் இவர் தான் ஆஸ்தான இசை அமைப்பாளர். ஆனால், துளியும் கர்வம் இல்லாமல் வெற்றி நடை போட்டு வருகிறார் இந்த இளம் ராக்ஸ்டார்.
இசை அமைப்பது என்று இல்லாமல் மற்ற இசை அமைப்பாளர்கள் அழைத்தால் அவர்களுக்கு பாடி தருவது அனிருத் இன் வழக்கம். அப்படி, பாடும் பாடல்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை என்கிற தகவல் கசிந்துள்ளது. இதை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் அனிருத் எவ்வளவு தொகை கேட்டாலும் அதை தர தயாரிப்பாளர்கள் இருக்கும் நிலையில் அவரின் இந்த செயல் பலரை வியப்பில் மலைக்க வைத்துள்ளது.
ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான், இமான் என திரை துறையின் முக்கிய இசை அமைப்பாளர்கள் இவரை பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.