பெங்களூரில் சாலையில் இருந்து நடைபாதைக்கு பாய்ந்த கார் ஒன்று நடந்து சென்று நடைபாதையினர்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரில் உள்ள எச்.எஸ்.ஆர். லே அவுட் என்ற இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராஜேந்திரா என்ற ஓட்டுநர் குடிபோதையில் காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதைக்கு பாய்ந்து, நடந்து சென்றவர்கள் மீது மோதி அவர்களை தூக்கி வீசியது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கார் ஓட்டுநர் ராஜேந்திராவைக் கைது செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
CCTV footage of a cab running over few people on the footpath at HSR Layout in #Bengaluru today afternoon.
7 people injured. 5 minor and two hospitalised. Out if danger.Driver arrested for D&D by @BlrCityPolice@blrcitytraffic pic.twitter.com/yusfjBfezY
— Anantha-Infinity (@Ananthaforu) August 18, 2019