கோவை மாவட்டம் சுக்கிரவார பேட்டை பகுதியில் இரண்டு காளைகளுக்கிடையே பலத்த மோதல் ஏற்பட்டது.சாலை நடுவே இரண்டு மாடுகளும் ஒன்றோடு ஒன்று கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. இதை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் அந்த மாடுகளை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் சற்றும் அசராத அந்த காளைகள் சுமார் 30 நிமிடங்கள் கொம்போடு கொம்பை முட்டி பலப்பரீட்சை செய்து பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தின. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More