Mnadu News

நிவாரணப் பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது …

உத்தரகண்டில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தர்காஷி பகுதியில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால், 15 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், சனெல்  கிராமத்தில் மாயமான 20க்கு மேற்பட்ட மக்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஹெலிகாப்டர் ஒன்று எடுத்து சென்றது.

ஹெலிகாப்டர் மோரியிலிருந்து மோல்டி நோக்கி சென்ற சிறிது நேரத்தில் உத்தர்காஷி மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரை இயக்கி சென்ற விமானி ராஜ்பால், துணை விமானி கட்பால் லால் மற்றும் உள்ளூரை சேர்ந்த ரமேஷ் சாவார் ஆகியோரின் நிலை இன்னும் தெரியாத நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Share this post with your friends