சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகா் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாா். இந்த தோ்தலில் அவா் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியை சந்தித்தார் .
இந்நிலையில், நேற்று இரவு பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறவுள்ள பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் பிரகாஷ் ராஜ்ஜின் புதிய கட்சியின் சாா்பாக வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.