Mnadu News

தொகுதி மக்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகர்

தமிழ் திரையுலகில் அனைவராலும் தவிர்க்க முடியாத மறக்கவும் முடியாத தனது நடிப்பின் மூலம் ஒரு கொடிய வில்லனாக வளம் வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான் . இவர் தற்போது நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கிறார் . மன்சூர் அவர்கள் பிரச்சாரத்தை ஒரு வித்யாசமான முறையில் செய்து வருகிறார் .

பிரச்சாரம் என்றால் வீட்டுக்கு வீடு சென்று கும்பிட்டும் காலில் விழுந்தும் ஓட்டு கேட்டு பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களது வாழ்கை முறையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்தும் தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் நடிகர் மன்சூர் .

உதாரணமாக தெருவில் இருக்கும் குப்பைகளை அள்ளியும் குப்பை வண்டியை தள்ளியும் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றும் பிரச்சாரத்தை நடத்துகிறார் . இதன் மூலம் அந்த தொகுதியின் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் மன்சூர் அலிகான் . நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி காண்பாரா அலிகான் காத்திருப்போம் .

Share this post with your friends