Mnadu News

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வானார்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பைலட் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 163 பழங்குடியின பெண்களுக்கு முதலில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அரசு போக்குவரத்தில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த புது முயற்சியை புனேவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டேல் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட தொலைவுக்கு பெண் ஓட்டுநர்களை அனுப்பக்கூடாது என்றும் வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெண் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு பிரதீபா பட்டேல் வலியுறுத்தினார்.

இது பெண்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருபவர்கள் இந்தத் துறையிலும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள் என்றும் தேர்வு செய்யப்பட்ட பெண் ஓட்டுநர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More