Mnadu News

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் சேதுபதி கல்லூரியில் புதிய கட்டடத்தை தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து , புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் குத்து விளக்கு ஏற்றி வைத்து, மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து புதிய கட்டடத்தில் உள்ள ஆய்வகத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஆய்வகத்தை பயன்படுத்தும் விதம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார் . இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கட்டட பொரியாளர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share this post with your friends