சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தற்போது மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய சரித்திரத் தொடர் ‘வேள்பாரி’. இயற்கைக்கும், மனிதப் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதி வடிவம் தான் வேள்பாரியின் கதை.
இந்நிலையில், இந்த சரித்திரத் தொடரை திரைப்படமாக்க நடிகர் தனுஷ் ஆவலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.