Mnadu News

தேவராட்டம்’ படம் குறித்து நடிகர் கவுதம் கார்த்திக்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் – மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள படம் ‘தேவராட்டம்‘. இந்த படம் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக படக்குழுவினர் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கத்திற்கு சென்றனர்.

அப்போது கவுதம் கார்த்திக் கூறியதாவது “இந்த படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும், இந்த படம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends