இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 24வது படமான இதில் நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜெயம் ரவி ஆதிவாசி தோற்றத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .