தமிழ்த்திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஜோதிகா.திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் நீண்ட பிரேக் கொடுத்த இவர் சமீபகாலமாக படங்களை தேர்ந்தெடு நல்ல முறையில் நடித்து வருகிறார் .
அந்த வகையில் தற்போது ஜோதிகா 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கிறார். மேலும் ஜித்து ஜோசப் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார்.
இந்நிலையில், ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகியுள்ளார்.