வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ரித்து வர்மா. இதனை தொடர்ந்து தமிழில் சின்னா, துருவ நட்சத்திரம் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் அனைத்தும் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் தமிழரசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .