பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தில் நாயகியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பிரமாண்டமான போயிங் 757/200 ரக விமானத்தை படக்குழுவினர் பயன்படுகின்றனர். இந்த படத்தின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.