Mnadu News

நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் – நாசர்

சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம், நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை துவங்கியது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருவதால் இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார்.

இவரை தொடர்ந்து துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் பேசும்போது “தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார்” என்று கூறினார்.

Share this post with your friends