Mnadu News

தளபதி 63′ படத்தில் மேயாத மான் நடிகை

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான கால்பந்து மைதான அரங்கம் அமைக்கப்பட்டு இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘மேயாத மான்’படத்தில் நடித்த இந்துஜா இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது . இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும். இவருடைய காட்சி சம்பந்தமான படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

Share this post with your friends